Latestமலேசியா

புலாவ் தியோமான் கடற்கரை பகுதிகளில் விஷமுள்ள ஜெல்லி மீன்கள்; பொதுமக்களுக்கு எச்சரிக்கை

குவாந்தான், பிப்ரவரி 27-Portuguese Man o’ War எனப்படும் விஷமுள்ள ஜெல்லி மீன்கள் இனங்கள் புலாவ் தியோமான் கம்போங் தெக்கேக் (Kampung Tekek) மற்றும் கம்போங் செப்பாட் (Kampung Sepat) கடற்கரை பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளதாக பஹாங் மாநில மீன்வளத் துறை தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழைக் காலத்தில் பசிபிக் பெருங்கடலிலிருந்து கடலோட்டத்தால் இவ்வினங்கள் இப்பகுதிக்கு வந்து சேரக்கூடும்.

மீன்வளத் துறை இயக்குநர் ரோஸ்லான் அபு ஹாசான் (Roslan Abu Hasan) கூறுகையில், இந்த ஜெல்லி மீன்கள் மிகவும் ஆபத்தானது என்று குறிப்பிட்டார்.

இந்த வகை மீன் இனம் ஊனமடையச் செய்யக்கூடும் என்றும் தோலில் தீவிர காயங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் கடுமையான நிலையில் உயிரிழப்புக்கும் காரணமாகலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடற்கரையில் இது காணப்பட்டால், உயிருடன் இருந்தாலும் இறந்திருந்தாலும் தொடக்கூடாது என்றும் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பளிச்சென்ற நீல நிறத்தில் சிறிய பிளாஸ்டிக் பொருளைப் போல தோற்றமளிப்பதால் தொட வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படலாம்; இருப்பினும் அது மிகுந்த விஷமுள்ளது.

ஜெல்லிபிஷ் கடித்தால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனை அல்லது கிளினிக்கில் சிகிச்சை பெற வேண்டும் என்றும் பொதுமக்கள் கடற்கரை பகுதிகளில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!