ஷா ஆலம், அக்டோபர் 2 – பூனையை மோட்டார் சைக்கிளில் கட்டி, சாலையில் தரதரவென்று இழுத்துச்சென்று காயப்படுத்தியதாகத் துப்புரவு பணியாளரான வங்காளதேச ஆடவர் ஒருவர் மீது, இன்று ஷா ஆலம் செஷ்ன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி, 41 வயது Monotosh என்ற அந்த ஆடவர், ஷா ஆலாம், செக்ஷன் 31 இல் இக்குற்றத்தைப் புரிந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 2 லட்சம் முதல் 1 லட்சம் ரிங்கிட் அபராதம் அல்லது மூன்று ஆண்டு சிறை அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த வங்காளதேச ஆடவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
இந்நிலையில், அந்த ஆடவர் தனது 1,500 ரிங்கிட் சம்பளத்தில் குடும்பத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டிய சூழலில், நீதிமன்றம் 13,000 ரிங்கிட் ஜாமின் தொகையுடன், தனிநபர் உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்க அனுமதி அளித்தது.