
கோலாலம்பூர், டிசம்பர்-1,நம்பிக்கை குழுமத்தின் ஏற்பாட்டில் நம்பிக்கை நட்சத்திர விருது விழா 2024 நேற்றிரவு நடைபெற்றது.
3-வது முறையாக நடத்தப்பட்ட இவ்விருது விழாவில் மொத்தம் 42 விருதுகள் வழங்கப்பட்டன.
அதில் 23 பிரிவுகள் வாக்களிப்பின் வழி தேர்ந்தெடுப்பட்டதாகும்.
19 பிரிவுகளுக்கு, நீதிபதிகளின் தேர்வின் அடிப்படையில் விருதுகள் வழங்கப்பட்டன.
சிறந்த செய்தி ஆசிரியருக்கான பிரிவில் வணக்கம் மலேசியாவின் கே.பத்மநாபன் விருது வென்றார்.
நாட்டின் மூத்த கலைஞரான சத்தியாவுக்கு கலைத்துறைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் தான் ஸ்ரீ ஆர். நடராஜாவுக்கு சேவைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
முதன்மை விருதான ‘மலேசிய மாமனிதர் – துன் சாமிவேலு வாழ்நாள் சாதனையாளர் விருது’ மூத்த அரசியல்வாதி தான் ஸ்ரீ க.குமரனுக்கு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.