
ஈப்போ, மார்ச்-19-பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, உதவி தீயணைப்பு அதிகாரி (Pegawai Bomba Bantuan – PBB) பொறுப்புக்கு ஆள்சேர்ப்பு நடத்துகிறது.
விண்ணப்பிக்க விரும்புவோர் 18 முதல் 45 வயது வரையிலான மலேசிய குடிமக்களாக இருக்க வேண்டும்; குறைந்தபட்சம் PMR தகுதியைக் கொண்டிருக்க வேண்டும்.
உடல் அளவைப் பொருத்தவரை, ஆண்கள் குறைந்தபட்ச 1.57 மீட்டர் உயரமும், பெண்கள் 1.53 மீட்டர் உயரமும் கொண்டிருக்க வேண்டும்.
ஆண்களின் உடல் எடை 48 கிலோ, பெண்கள் உடல் எடை 46 கிலோவாக இருத்தல் வேண்டும்; BMI 19 முதல் 26 வரை இருக்க வேண்டும்.
அதோடு நல்ல பார்வை, கேள்வி திறன், உடல் நலமும் அவசியமாகும்.
விண்ணப்பதாரர்களின் வீடுகள், தீயணைப்பு நிலையத்திற்கு 25 கிலோ மீட்டர் சுற்றளவில் இருக்க வேண்டும்.
தற்போதைக்கு, காலியிடங்கள் Batu Kurau, Sungai Siput, Kamunting, Pengkalan Hulu, Parit Buntar, Trong, Gopeng, Tanjung Malim, Slim River, Bidor, Kampong Gajah, Parit, Seri Iskandar, Hutan Melintang ஆகிய இடங்களில் உள்ளன.
ஒரு மணி நேரத்திற்கு RM8 ரிங்கிட் வீதத்தில் அலவன்ஸ் வழங்கப்படும்.
விண்ணப்பங்கள் வரும் மார்ச் 30 -ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
ஆர்வமுள்ள இளைஞர்களும், யுவதிகளும் திரையில் காணும் QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.



