Latestமலேசியா

”பேருந்தை ஓட்டுவதில் எனக்கு உற்சாகம்”… ஓட்டுனரின் மடியில் அமர்ந்த பெண் வாக்குமூலம்

ஜாசின், ஏப்ரல்-16-மலாக்கா ஜாசினில் பேருந்து ஓட்டுநரின் மடியில் அமர்ந்து சென்று வைரலான 21 வயது பெண், ‘பேருந்தை ஓட்டுவதில் தனக்கிருந்த உற்சாகம் மற்றும் ஆர்வம்’ காரணமாகவே காதலன் மடியில் அமர்ந்து ஸ்டியரிங் பிடித்ததாக போலீஸ் விசாரணையில் கூறியுள்ளார்.

இன்னொரு பேருந்து நிறுவனத்தின் டிக்கெட் முகப்பிட குமாஸ்தாவான அப்பெண், கடந்த 5 மாதங்களாக அந்த 36 வயது ஓட்டுநருடன் பழக்கத்தில் இருந்து வருகிறார்.

இருவரிடமும் நேற்று 2 மணி நேரங்கள் விசாரணை நடத்தப்பட்டு,பின்னர் கைதுச் செய்யப்பட்டனர்.

மேல் விசாரணைக்குத் தடுத்து வைக்க ஏதுவாக இன்று ஜாசின் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அனுமதிப் பெறப்படும் என மாவட்ட போலீஸ் கூறியது.

பயணியொருவர் எடுத்த வீடியோவில், பேருந்து ஓட்டுனரின் மடியில் அமர்ந்த நிலையில் அப்பெண் ஸ்டியரிங் பிடித்துக் கொண்டிருக்கும் காட்சிகள் வைரலாகி பெரும் கண்டனத்தை ஏற்படுத்தின.

இச்சம்பவம் ஏப்ரல் 12-ஆம் தேதி இரவு 7.30 மணியளவில், Bemban R&R தெற்கு நுழைவாயில் அருகே நெடுஞ்சாலையில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!