![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/10/MixCollage-18-Oct-2024-08-43-AM-9515.jpg)
டாக்கா, அக்டோபர்-18, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வாஜீட்டுக்கு கைது ஆணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதக் கலவரங்களில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு தொடரப்பட்ட வழக்கில், ஹசீனா உள்ளிட்ட 45 பேரைக் கைதுச் செய்ய டாக்காவில் உள்ள அனைத்துலகக் குற்றவியல் நடுவர் மன்றம் ஆணையிட்டது.
ஹசீனாவை நவம்பர் 18-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என நடுவர் மன்ற நீதிபதி காலக்கெடு விதித்தார்.
வங்காளதேசத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் பெரும் வன்முறையாக மாறி நிலைமை கை மீறிச் சென்றதால், ஆகஸ்ட்டில் பிரதமர் பதவியிலிருந்து விலகிய ஹசீனா, நாட்டை விட்டே வெளியேறினார்.
இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஹசீனாவை நாடு கடத்த இந்த நடுவர் மன்றத்தின் கைது ஆணை உதவுமென்றாலும், இந்தியா அதற்கு ஒத்துழைக்குமா என்ற கேள்வியும் எழவே செய்கிறது.
வங்காளதேசத்தில் தற்போது நோபல் பரிசுப் பெற்ற முகம்மது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவி வகித்து வருகிறது.