
பூச்சோங், மார்ச்-16 – Legendary Riders Malaysia Club, வணக்கம் மலேசியா ஆதரவுடன் பூச்சோங்கில் இருக்கும் யாயாசான் நூர் மஞ்சில் (Yayasan Noor Manzi) ஆதரவற்றோர் இல்லத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு, நேற்று நோன்பு துறக்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
சுமார் 18 குழந்தைகள் தங்கியிருக்கும் அவ்வில்லத்தை 16 வருடங்களாக சுலைமான் குடும்பத்தினர் நடத்தி வருகின்றனர்.
அனைவரையும் தங்கள் சொந்த பிள்ளைகள் போல அவர்கள் பராமரித்து வருகின்றனர்.
இந்நிலையில் நோன்பு துறக்கும் நிகழ்வையும் பிறகு, பிள்ளைகளோடு சேர்ந்து மஃகிரிப் தொழுகையையும் Legendary Riders Malaysia Club தலைவர் மொஹைதீன் (Mohaideen) நடத்தினார்.
சிறப்பு விருந்தினராக Dato ஜெகன் கலந்துகொண்டு, ஹரி ராயாவுக்கு புத்தாடைகள் வாங்குவதற்கான பற்றுசீட்டுகளை குழந்தைகளிடம் வழங்கினார்.
அதைப் பெற்றுக் கொண்ட குழந்தைகளின் முகத்தில் பூரிப்பைக் காண முடிந்தது.
மூவினங்கள் ஒற்றுமையாக வாழும் இந்த மலேசிய மண்ணில் நாம், பிறர் நம்பிக்கை மற்றும் கலாச்சாரத்தை மதிக்க வேண்டும்.
ஒற்றுமையாக அவர்களுடன் தோள்கொடுத்து நாட்டின் சுபிட்சத்தை காப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும் என, Legendary Riders Malaysia Clubப்பின் தோற்றுநர் மகேந்திரமணி கூறினார்.
இந்நிகழ்வில் Legendary Riders Malaysia Club குழுவினர் மற்றும் வணக்கம் மலேசியா பிரதிநிதியாக கோபால கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.