
மலாக்கா, மார்ச்-20-மலாக்காவில் தனது கர்ப்பிணி மனைவியை பொது வெளியில் கடுமையாகத் தாக்கி வைரலான கணவர் கைதாகியுள்ளார்.
22 வயது அவ்விளைஞர், நேற்று காலை ஜாசினில் உள்ள ஒரு வீட்டில் கைதுச் செய்யப்பட்டார்.
விசாரணைக்காக அந்நபர் தடுத்து வைக்கப்படுகிறார்.
குற்றவியல் மற்றும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் இச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்து தகவல் தெரிந்தோர் போலீசை தொடர்பு கொள்ளுமாறு மலாக்கா தெங்கா போலீஸ் கேட்டுக் கொண்டது.
முன்னதாக, Kota Shahbandar-ரில் உள்ள ஒரு கராவோக்கே கேளிக்கை மையத்தில் நிகழ்ந்த அச்சம்பவத்தில், அவ்வாடவர் தனது கர்ப்பிணி மனைவியை சரமாரியாக அடித்ததோடு, மோட்டார் சைக்கிளைக் கொண்டு தலையில் மோதிய வீடியோ வைரலாகி கடும் கண்டனத்தைப் பெற்றது.



