மலாக்கா, ஆகஸ்ட்-4, மலாக்காவில் பள்ளிவாசல் அருகே இலவச பைபிள் பயிற்சி (Free Bible Coure) குறித்து சிலர் விளம்பரம் செய்யும் வீடியோ வைரலாகியிருப்பது குறித்து, மலேசிய கிருஸ்தவ சம்மேளனம் (CFM) கவலைத் தெரிவித்துள்ளது.
எனினும் அதற்கும் தங்களின் கீழ் செயல்படும் ரோமன் கத்தோலிக்க திருச்சபை, மலேசிய தேவாலயங்களின் மன்றம் உள்ளிட்ட அமைப்புகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென இன்று வெளியிட்ட அறிக்கையில் CFM தெளிவுப்படுத்தியது.
நாட்டில் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கம் பேணப்பட வேண்டும் என்பதில் நாங்களும் உறுதியாக உள்ளோம்.
எனவே அச்சம்பவம் குறித்து விசாரித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்திட முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை தாங்களும் ஆதரிப்பதாக CFM கூறியது.
முன்னதாக வைரலான 16 வினாடி வீடியோவில் பள்ளிவாசல் அருகே கையேடுகளை வைத்துக் கொண்டு சிலர் நிற்பதும், தள்ளுவண்டியில் ‘இலவச பைபிள் பயிற்சி’ என எழுதி ஒட்டப்பட்டிருந்ததையும் காண முடிந்தது.
பண்டா ஹிலிரில் (Banda Hilir) ஜூலை 27-ல் நிகழ்ந்ததாகக் கூறப்படும் அச்சம்பவம் குறித்து மலாக்கா இஸ்லாமிய சமயத் துறையின் பணியாளர் உள்ளிட்ட நால்வரிடமிருந்து புகார் கிடைத்திருப்பதை, மலாக்கா போலீஸ் நேற்று உறுதிப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.