அலோர்காஜா, ஏப் 11 – மலாக்கா , Durian Tunggal , Jalan Gangsa – Kesang சாலையில் மோட்டார் சைக்கிள் மற்றும் போலீஸ் ரோந்து வாகனத்துக்கிடையே எற்பட்ட விபத்தில் காயமடந்த மோட்டார் சைக்கில் ஓட்டியான 18 வயது இளைஞர் இன்று காலையில் மரணம் அடைந்தார்.
புதன்கிழமை அதிகாலை மணி 2.56 அளவில் நடந்த அந்த சம்பவத்தில் கல்முறிவு மற்றும் கடுமையான காயத்திற்கு உள்ளான Mohammad Khairul Basahri என்ற அந்த இளைஞர் மரணம் அடைந்ததை மலாக்கா போலீஸ் தலைவர் துணை கமிஷனர் டத்தோ Zainol Samah உறுதிப்படுத்தினார்.
அந்த இளைஞர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளை மோதிய போலீஸ் கார் தொடர்பான 40 வினாடிகள் கொண்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதையும் தாங்கள் கண்டறிந்ததாக அவர் கூறினார். Durian Tunggal போலீஸ் நிலையத்தை சேர்ந்த 37 வயதுடைய அதிகாரி ஒருவர் அந்த வாகனத்தை ஓட்டினார். சட்டவிரோத மோட்டார்சைக்கிள் பந்தயம் நடைபெற்றுவரும் பகுதியில் தொல்லை தரக்கூடிய சத்தம் வருவதாக பொதுமக்களிடமிருந்து புகார் பெற்றதைத் தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்திற்கு போலீஸ் வாகனம் சென்றபோது அந்த விபத்து நிகழ்ந்தது.