Latestமலேசியா

மலேசியர்களுக்கான இலவச மின்-சுற்றுலா விசா நீட்டிப்பு; இந்தியத் தூதரகம் அறிவிப்பு

கோலாலம்பூர், ஜூலை-26, இரட்டை நுழைவுடன் 30-நாள் செல்லுபடியாகும் இலவச மின்-சுற்றுலா (e-Tourist) விசா, அடுத்தாண்டு டிசம்பர் 31 வரை மலேசியர்களுக்கு நீட்டிக்கப்படுவதாக, இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது.

https://indianvisaonline.gov.in/evisa/tvoa.html என்ற அதிகாரப்பூர்வ இணைய அகப்பக்கத்தில் இந்த 30-நாள் மின்-சுற்றுலா விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த 30-நாள் e-Tourist விசாவுக்கு மட்டுமே கட்டணமில்லை.

e-business, e-conference, e-medical உள்ளிட்ட மற்ற அனைத்து மின் விசா பிரிவுகளுக்கும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் தொடரும்.

இவ்வேளையில், மலேசியாவில் 6 மாநிலங்களில் உள்ள இந்தியத் தூதரக விண்ணப்ப மையங்களில் வழக்கமான விசாக்களுக்கு விண்ணப்பிப்போரும், நிர்ணயிக்கப்பட்ட விசா கட்டணத்தை தொடர்ந்து செலுத்தி வருவர் என தெரிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!