பேராக், டிசம்பர் 31 – கிந்தா பேராக் மாவட்ட இந்திய கலைஞர்கள் சங்கத்தின் முன்னெடுப்பில், பொருளாதார மேம்பாட்டு கூட்டுறவு ஆதரவில், மலேசிய இந்திய பாரம்பரிய கலை மற்றும் கலாச்சார கிறிஸ்டல் விருது 2024 விழா மிக விமரிசையாக நடைபெற்றது.
மலேசிய கலைத்துறையின் வரலாற்றில் முக்கிய அடையாளமாக அமைந்த இந்த விழா, பேராக் மாநில தேசிய கலாச்சாரக் கலைத்துறையின் அங்கிகாரத்துடன் நடந்தேறியது.
இந்த விழாவில் பரதநாட்டியம், நாட்டுப்புற மற்றும் நவீன நடன கலைஞர்கள்; காவடி தயாரிப்பு மற்றும் அலங்கார குழுவினர்கள்; உருமி மேளம், தாரை தப்பட்டை, தப்பு மேள வாத்திய கலைஞர்கள்; மலேசிய, சிங்கப்பூர் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல முன்னணி கலைஞர்கள் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
கலைத்துறையில் சாதனை மற்றும் அர்ப்பணிப்பு மிக்க கலைஞர்களின் பணியையும் திறமைகளையும் போற்றும் விதமாக, இந்த விருதளிப்பு விழா முதன்முறையாக கிந்தா பேராக் மாவட்ட இந்திய கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் கனியரசு தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த டிசம்பர் 21 அன்று, ஒரே நாளில் 130 கலைஞர்கள் கௌரவிக்கப்பட்ட இந்த விழா, ஆசியான் உலக சாதனையாகப் பதிவு செய்யப்பட்டு பெருமை சேர்த்தது குறிப்பிடத்தக்கது