Latestமலேசியா

மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம் இவ்வாண்டு 8,399 இணைய பகடிவதை சம்பவங்களை பதிவு செய்துள்ளது

கோலாலம்பூர், நவ 19 – மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையமான MCMC
இவ்வாண்டு 8,399 இணைய பகடிவதை சம்பவங்கள் குறித்த புகார்களை பெற்றுள்ளதோடு இவ்வாண்டு ஜனவரி 1 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 1ஆம்தேதிவரை தினசரி 27 புகார்களை பெற்று வருவதாக தொடர்பு அமைச்சர் பாமி பாட்ஷில் ( Fahmi Fadzil ) தெரிவித்திருக்கிறார். இதற்கு முன் தினசரி 10 புகார்கள் மட்டுமே பெற்றதை ஒப்பிடுகையில் இந்த புள்ளி விவரங்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதால் , சமூக ஊடக உரிமத்தை அமல்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, அவர்களின் தளங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு பாதுகாப்பான இணைய சுற்றுச் சூழல் அமைப்பை உருவாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. முகநூலில் , வணிகக் குற்றப் புலனாய்வுத் துறைக்கு (NCID) பதிவான மொத்த இணைய மோசடி வழக்குகளின் எண்ணிக்கையில் மலேசியப் பொதுமக்களுக்கு
432 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டது என்றும் பாமி கூறினார்.

சமூக ஊடகங்களில் சிறார்கள் சம்பந்தப்பட்ட பாலியல் குற்றச் செயல்களும் அதிகரித்துள்ளன. 2023ஆம் ஆண்டு சிறார்கள் தொடர்பான 525 பாலியல் குற்றச்செயல்கள் நிகழ்ந்தன. இவ்வாண்டு நவம்பர் 1ஆம் தேதிவரை சமூக ஊடகங்களில் சிறார்களின் பாலியல் துஷ்பிரயோகம் உள்ளடக்கத்தை நீக்குவதற்கான 815 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக இன்று நாடாளுமன்றத்தில் பாசிர் கூடாங் பக்காத்தான் ஹராப்பான் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் அப்துல் கரிம் ( (Hassan Abdul Karim ) எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தபோது பாமி இதனைத் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!