ஷா ஆலாம், அக்டோபர்-14, மலாக்கா, மஸ்ஜித் தானாவில் வெள்ளியன்று பிடிபட்ட 3 ராட்சத அராபைமா (arapaima) மீன்களும் மடிந்து போயுள்ளன.
ஆளுயரத்திற்கு, தலா 200 கிலோ கிராம் எடை மற்றும் 2.5 மீட்டர் நீளமிருந்த அம்மூன்று மீன்களும் இறந்துபோனதை Zoo Negara உறுதிபடுத்தியது.
வயது மூப்பால் அவை மடிந்திருக்கலாமென நம்பப்படுகிறது.
என்றாலும் உண்மைக் காரணத்தைக் கண்டறிய பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படுமென, மலாக்கா மீன்வளத் துறை கூறியது.
Invasive species என்றழைக்கப்படும் ஆக்கிரமிப்பு இனங்களைச் சேர்ந்த அம்மீன்கள் மஸ்ஜித் தானாவில் கைவிடப்பட்ட வீட்டொன்றின் கீழ் தேங்கியிருந்த நீரில் பிடிபட்டன.
அவற்றைப் பிடிக்கும் போது, மீன்கள் திமிறியதில் மீன்வளத் துறையின் 5 பணியாளர்கள் காமடைந்தது குறிப்பிடத்தக்கது.