
கோலாலம்பூர், ஜூலை 10 – சபா தாவாவில் , ஒரு மாணவியின் முன்னிலையில் தனது அந்தரங்க உறுப்பை வெளிப்படுத்தியதற்காக ஆடவன் ஒருவனை போலீசார் கைது செய்தனர். பதின்ம வயது நபர் அளித்த போலீஸ் புகாரைத் தொடர்ந்து , 30 வயதுடை அந்த சந்தேக பேர்வழி கைது செய்யப்பட்டதாக தாவாவ் போலீஸ் தலைவர் ஜஸ்மின் உசின் ( Jasmin Hussin ) தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர் மாணவி மதியம் மணி 12.45 அளல் பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது அடையாளம் தெரியாத ஒருவரால் இயக்கப்படும் நான்கு சக்கர வாகனம் அவரை அணுகியதாகக் கூறப்படுகிறது. அந்த ஆடவர் தனது அந்த உறுப்பை காண்பிப்பதற்கு முன் சாலை குறித்த விவரங்களை கேட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி பாதுகாப்பு கருதி அருகேயுள்ள குடியிருப்பு பகுதிக்கு ஓடிய பின்னர் இது குறித்து போலீசில் புகார் செய்துள்ளார்.
அதன் பிறகு அதே தினத்தில் மாலை மணி 4.30 மணியளவில் Merotai பகுதியில் உள்ள வீட்டில் அந்த சந்தேகப் பேர்வழி கைது செய்யப்பட்டதோடு அவரது நான்கு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. கூடியபட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் பிரம்படி விதிக்கப்படும் 2017ஆம் ஆண்டின் சிறார் சட்டத்தின் பாலியல் குற்றப்பிரிவு 14 ( a)யின் கீழ் இந்த விவகாரம் குறித்து விசாரிக்கப்படுகிறது.