Latestமலேசியா

மானிய சமையல் எண்ணெய் விற்பனைக்கு நிபந்தனை விதித்த செமஞே பேரங்காடியில் அதிரடி சோதனை

செமஞே, செப்டம்பர்-24,மானிய விலையிலான ஒரு கிலோ பேக்கெட் சமையல் எண்ணெயை வாங்குவதற்கு நிபந்தனை விதித்த குற்றச்சாட்டின் பேரில், சிலாங்கூர் செமஞேவில் உள்ள பேரங்காடி ஒன்றை உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சான KPDN அதிரடியாகச் சோதனையிட்டுள்ளது.

​ஒரு பெட்டி சமையல் எண்ணெயை வாங்குவதற்கு, வாடிக்கையாளர்கள் அந்த பேரங்காடியில் குறைந்தபட்சம் 300 ரிங்கிட் மதிப்பிலான இதர மளிகைப் பொருட்களை வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கிடைத்தப் புகாரைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

​புகாரின் நம்பகத்தன்மையை உறுதிச் செய்ய மாறுவேடத்தில் சென்ற KPDN அமுலாக்கப் பிரிவு அதிகாரிகள், 303 ரிங்கிட் 65 காசு மதிப்பிலான இதர பொருட்களை வாங்கிய பிறகே, 42 ரிங்கிட் 50 காசு மதிப்புள்ள 17 சமையல் எண்ணெய் பேக்கெட்டுகளை வாங்க அனுமதிக்கப்பட்டதாக KPDN அமுலாக்கப் பிரிவு தலைமை இயக்குநர் டத்தோ Azman Adam தெரிவித்தார்.

​கட்டுப்படுத்தப்பட்டப் பொருட்களை விற்பனை செய்யும்போது இதுபோன்ற சட்டவிரோத நிபந்தனைகளை விதிப்பது தண்டனைக்குரிய குற்றம் என எச்சரித்த அவர், இச்சம்பவம் குறித்து 1961-ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!