Latestமலேசியா

2100 ஆம் ஆண்டு வாக்கில் மலேசியாவில் கடல் நீர் மட்டம் 0.74 மீட்டர் வரை உயரக்கூடும் – Tok Mat

நியூயார்க், செப்-25-2100ஆம் ஆண்டு வாக்கில் மலேசியாவின் கடற்கரையோரப் பகுதிகளில் கடல் நீர் மட்டம் 0.74 மீட்டர் வரை உயரக்கூடும். காலநிலை முன்னறிவிப்புகளின் அடிப்படையில் அது தெரிய வந்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் Datuk Seri Mohamad Hassan தெரிவித்துள்ளார்.

கடல் நீர் மட்ட உயர்வின் தாக்கங்கள் தீவுகள் மற்றும் கடற்கரையோரப் பகுதிகளில் ஏற்கனவே உணரப்பட்டு வருகிறது. கடல் நீர் மட்ட உயர்வு மலேசியாவின் வளர்ச்சி மற்றும் பேரிடர் மீட்சிக்கு சவாலாக உருவெடுத்துள்ளது. அது நீர் பாதுகாப்பு, விவசாயம் மற்றும் உள்கட்டமைப்பை பாதிக்கக்கூடும் என 81 ஆவது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் உயர்மட்டக் கூட்டத்தில் அவர் கூறினார்.

மேலும், கடலோரங்களில் வசிப்பவர்கள் வெள்ளம், கடலோர அரிப்பு மற்றும் கடல்நீர் ஊடுருவல் போன்ற பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். எனவே தயார் நிலையாக மலேசியா தனது பல முயற்சிகளை வலுப்படுத்தி வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எனினும், மலேசியா போன்ற வளரும் நாடுகள் தனியாக காலநிலை மாற்றத்தைச் சமாளிக்க முடியாது. காலநிலை நிதி, தொழில்நுட்பப் பரிமாற்றம் மற்றும் திறன் மேம்பாட்டில் வளர்ந்த நாடுகள் தங்களது கடமைகளை நிறைவேற்ற கடப்பாடுடன் செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே, ஐ.நா. கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரகடனத்தை மலேசியா வரவேற்பதாக Mohamad Hasan தெரிவித்தார். அறிவியல், தரவு மற்றும் தயார்நிலைக்கு முக்கியத்துவம் அளிக்கும் அந்தப் பிரகடனத்தைச் செயல்படுத்துவதில் பலதரப்பு ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!