
கோலாலம்பூர், ஏப்-2-மித்ரா எனப்படும் மலேசிய இந்தியர் உருமாற்ற பிரிவின் இயக்குநராக ரவிந்திரன் நாயர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாண்டு மார்ச் 24தேதி முதல் அவரது நியமனம் அமலுக்கு வந்துள்ளது.
கடந்த 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் மித்ராவின் இயக்குநராக ஏற்கனவே ரவிந்திரன் நாயர் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இவரது இந்த நியமனத்திற்கு மனித வள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஸ்ணன் வாழ்த்து தெரிவித்ததோடு இது மலேசிய இந்திய சமூகத்திற்குள் சமூக-பொருளாதார மேம்பாட்டு முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாக குறிபிட்டார்.
அதோடு அவரது தலைமையின் கீழ், மலேசியா மடானி செயல்திட்டத்திற்கு இணங்க, மித்ரா மேலும் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் மாற்றங்களுக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
அதே சமயத்தில், ரவீந்திரன் நாயர் தனது பொறுப்புகளைத் திறம்பட நிறைவேற்றி, சமூகத்தின் முன்னேற்றத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவார் எனவும் சம்பந்தப்ட்ட தரப்பினர் நம்பபுவதாக அவர் தெரிவித்துள்ளார்.



