
ஜோகூர், அக்டோபர் 19 – 70 வயது முதியவரைப் பசை டின்னால் தாக்கிக் காயப்படுத்திய 47 வயது நபருக்கு, செகாமாட் மஜிஸ்திரேட் நீதிமன்றம் 10 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்தது.
அந்த நபர், தாம் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இன்று இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த அக்டோபர் 15ஆம் தேதி பிற்பகல் 1.30 மணியளவில், கம்போங் அப்துல்லாவிலுள்ள மின்சாதனப் பொருட்கள் கடைக்கு முன்னால் இந்தச் சம்பவம் நடந்தது.
முதியவரைப் பசை டின்னால் தாக்கிக் காயப்படுத்திய குற்றத்திற்காக, குற்றவியல் சட்டத்தின் கீழ் அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.



