Latestமலேசியா

35 ஆண்டுகால வெற்றிப் பயணம்: Enrico’s ‘வருஷ வெற்றிக் கொண்டாட்டம்’

கோலாலம்பூர், அக்-19-மலேசியாவில் உணவு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்குப் பெயர் போன Enrico’s நிறுவனம், தனது 35ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் நேரடி நிகழ்ச்சிகளையும் போட்டிகளையும் நடத்தி வருகிறது. அதன் மூலம் அந்நிறுவனம் வாடிக்கையாளர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு, தனது தயாரிப்புகளைப் பொதுமக்களிடம் அறிமுகப்படுத்தி வருகிறது.

அக்கொண்டாட்டத்தின் முதல் நிகழ்ச்சி அக்டோபர் 8 முதல் 9ஆம் தேதி வரை கெடாவில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, அக்டோபர் 16 முதல் 18ஆம் தேதி வரை ஈப்போவில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அடுத்ததாக, அக்டோபர் 21 முதல் 23ஆம் தேதி வரை பினாங்கில் பல நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

இந்த ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகப் போட்டி காணொளியும் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன், அடுத்தகட்ட நிகழ்ச்சிகள் மற்றும் காணொளிகள் குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

Enrico’s நிறுவனம் பால் பவுடர், முழுக் கொழுப்புச் செறிவுள்ள பால், சுத்தமான நெய் உள்ளிட்ட பால் பொருட்களையும், இந்திய மலைப்பகுதிகளில் விளைவிக்கப்படும் தேயிலை வகைகளையும் சந்தைப்படுத்தி வருகிறது. மேலும், பாரம்பரிய மசாலா கலவைகள், சோயா சார்ந்த உணவுப் பொருட்கள், பருப்பு வகைகள் மற்றும் உலர்ந்த கொட்டைகள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளையும் வெளியிடுகிறது. அது தவிர, பூஜைக்குத் தேவையான பாரம்பரியப் பொருட்களையும் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!