Latestமலேசியா

யுதார் பல்கலைக்கழக வருமான வரி ரத்து ஏன்? – பிரதமர் அன்வார் விளக்கம்

கோலாலம்பூர், அக் 15 – Utar ( யுதார்) எனப்படும் Tunku Abdul Rahman பல்கலைக்கழகத்திற்கான 83 மில்லியின் ரிங்கிட் வருமான வரி ரத்துச் செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து இன்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிம் விளக்கம் அளித்தார். ஆதாயமற்ற கல்வி கழகங்களுக்கு வரி விலக்கு அளிப்பது என்ற அரசாங்கத்தின் கொள்கைக்கு ஏற்ப இந்த நடவடிக்கை அமைந்திருப்பதாக அவர் கூறினார். அந்த பல்கலைக்கழகமும் அதன் அறநிறுவனமும் யுதார் கல்வி அறநிறுவனத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டதே தவிர , அவை தனித்தனி அமைப்பாக செயல்படவில்லை என்ற காரணத்தினாலேயே ம.சீ.சவுக்கு தொடர்புடைய யுதார் பல்கலைக்கழகத்திற்கு வரி விலக்கை அங்கீகரிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக அன்வார் குறிப்பிட்டார். அந்த பல்கலைக்கழகம் இன்னும் தணிக்கை செய்யப்பட்ட கணக்கின் கீழ் தனித்தனி அமைப்பாக செயல்படவில்லையென மலேசிய சீன வாணிக தொழில் சம்மேளனத்தின் ஆண்டுக் கூட்டத்தில் உரையாற்றியபோது பிரதமர் இதனை தெரிவித்தார்.

யுத்தார் பல்கலைக்கழகத்திற்கான வரி விலக்கு விவகாரத்தில் நமது கொள்கை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆதாயமற்ற கல்வி நிலையங்களுக்கு வரி விலக்கு அளிப்பதுதான் நமது கொள்கையென அவர் வலியுறுத்தினார். கல்வித்துறைகளை மேம்படுத்துவது , வசதிக் குறைந்த பிள்ளைகளை படிப்பதற்கு அனுமதி வழங்குவது, அல்லது கல்விக் கட்டணத்தை ரத்துச் செய்வதால் வரி விலக்குகளை நாங்கள் வழங்குகிறோம். இதில் எந்தவொரு பிரச்னையையும் நான் பார்க்கவில்லை. யுதார்கல்வி நிதி இன்னும் மறுசீரமைக்கப்படவில்லை என்பதால் வரி விலக்கை தாமதமாக அங்கீகாரம் வழங்கியதால் இப்போதுதான் நாங்கள் அறிவித்தோம் .

எனினும் ஒரு ஆண்டுக்குள் மறுசீரமைக்கப்போவதாக அவர்கள் அண்மையில் எங்களிடம் தெரிவித்தனர். அதோடு வசதிக் குறைந்த பிள்ளைகளுக்கான கல்வி தொடர்பான அனைத்து அங்கீகாரத்திற்கும் வரி விலக்கிற்கு அவர்கள் மனுச் செய்திருந்தனர் என்றும் அன்வார் சுட்டிக்காட்டினார். யுதார் பல்கலைக்கழகத்திற்கு 83 மில்லியன் ரிங்கிட் வரி செலுத்த வேண்டும் என்றும் அவற்றில் 45 விழுக்காடு மேற்பட்ட அபராத தொகையும் அடங்கும் என கடந்த வாரம் தகவல் வெளியாகின.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!