Latestமலேசியா

ரோன்95 மானியம் மறுபரிசீலனை இரு நிலைகளில் செயல்படுத்தப்படும் – ரபிசி தகவல்

புத்ரா ஜெயா, ஜன 3 – RON95 மானியத்தை மறுபரிசீலனை செய்வது இரண்டு நிலைகளில் செயல்படுத்தப்படும்.

பெட்ரோல் நிலையங்களில் செயல்பாடுகளை உள்ளடக்கிய ‘front-end’  மற்றும் B85 குழுவில் உள்ளவர்களின் தகுதியை தீர்மானிப்பது உட்பட ‘back-end’ என்ற நிலையில் மானியத்திற்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லி தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பான இறுதித் தீர்வை அமைச்சரவை முடிவு செய்யும். பின் இறுதி விவகாரங்கள் பொருளாதார அமைச்சினால் நிர்வகிக்கப்படும் . RON95 மானிய இலக்கை செயல்படுத்துவதற்கு முன் அமைச்சரவையின் ஒப்புதல் பெறுவதற்காக இந்த விவகாரம் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்படும் என ரபிசி கூறினார்.

அடுத்த சில வாரங்களில் அமைச்சரவையால் முடிவு செய்யப்படும் PADU எனப்படும் பிரதான தரவுத் தள அமைப்பை மீண்டும் திறப்பதற்கான முன்மொழிவும் எழுப்பப்பட்ட அமைச்சரவைக் குறிப்பில் உள்ளதோடு, இந்த மாதம், பொருளாதார அமைச்சு இந்த விவகாரத்தை அமைச்சரவையில் எழுப்பி ஒப்புதல் பெறும் என ரபிசி நம்பிக்கை தெரிவித்தார்.

இதில் குறைந்த வருமானம் பெறும் B40 தரப்பினர் , நடுத்தர வருமானம் பெறும் M40 தரப்பினர் மற்றும் உயரிய வருமானம் பெறும் T20 தரப்பினரின் நிகர நிகர செலவழிப்பு வருமான அணுகுமுறைக்கான வகைப்பாடு மாற்றமும் அடங்கும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!