Latestமலேசியா

ரோஹிங்கியா மக்களுக்கு மலேசிய ஓட்டுநர் உரிமம் கிடையாது

கோலாலம்பூர், அக்டோபர் 1 – ரோஹிங்கியா மக்கள், UNHCR அட்டை வைத்திருந்தாலும், மலேசிய ஓட்டுநர் உரிமம் பெற முடியாது என்று சாலைப் போக்குவரத்துத் துறையான JPJ தெரிவித்துள்ளது.

ரோஹிங்கியா மக்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் போலியானது என்று JPJ தெரிவித்துள்ளது.

இந்தப் போலித் தகவலைப் பரப்பும் சமூக வலைத்தளக் கணக்குகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க, MCMC மற்றும் போலீஸாருடன் இணைந்து செயல்படுவதாக JPJ கூறியுள்ளது.

வெளிநாட்டினர், ஆவணங்கள் இல்லாத குடியேறிகள் மற்றும் UNHCR அட்டை வைத்திருப்பவர்கள் மலேசிய ஓட்டுநர் உரிமம் பெற தகுதியற்றவர்கள் என்றும் JPJ தெளிவுபடுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!