கோலாலம்பூர், நவ 11 – வங்சா மாஜாவில் அடுக்குமாடி புளோக் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பை தொடர்ந்து அங்கு வேலையை நிறுத்தும்படி முக்கிய குத்தகையாளருக்கு கோலாலம்பூர் மாநாகர் மன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும் அந்த வெடிப்புக்கு தாங்கள் காரணம் அல்ல என பிரதான குத்தகையாளர் தெரிவித்திருக்கிறார்.
TCS Group Holdings Bhd ட்டின் துணை நிறுவனமான TCS Construction Sdn Bhd நிறுவனம் J Satine மேம்பாட்டிற்கான பிரதான குத்தகையாளராக செயல்பட்டு வருகிறது. அந்த வெடிப்பிற்கான காரணத்தை கண்டறிவதற்காக மேம்பாட்டாளர் மற்றும் ஆலோசகர்களுடன் TCS Construction Sdn Berhad அணுக்காமாக பணியாற்றி வருகிறது என அந்த குழுமத்தின் நிர்வாக இயக்குனர் Tee Chai Seng தெரிவித்தார்.
கட்டிட விரிசல்கள் எங்களால் ஏற்படவில்லையென தொடக்கக்கட்ட கண்டுப்பிடிப்பின் மூலம் தெரியவருவதாக அவர் கூறினார். கட்டுமான செயல்முறை அனைத்திலும் நாங்கள் அனைத்து சுகாதார பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடித்துள்ளோம் என்பதை அனைத்து பங்குதாரர்களுக்கும் உறுதியளிக்க விரும்புகிறோம் என்பதோடு எங்களது குழுமம் அவர்களின் விசாரணையில் அதிகாரிகளுடன் ஒத்துழைக்கிறது என்றும் Tee Chai Seng கூறினார். இந்த திட்டம் தொடர்பான உறுதிப்படுத்தப்படாத காணொளிகள் அல்லது புகைப்படங்களை வெளியிடுவதை பொதுமக்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.