Latestமலேசியா

இம்மாதம் 25ஆம்தேதி முதல் வெளிநாட்டு பரிவர்த்தனைக்கு Touch ‘n Go e- wallet 1 விழுக்காடு கட்டணம் விதிக்கும்

கோலாலம்பூர், ஏப் 8 – ஏப்ரல் 25ஆம் தேதி முதல் TNG Digital Sdn Bhd (TNGD) அதன் Touch ‘n Go e -wallet தளத்தின் மூலம் செய்யப்படும் வெளிநாட்டு பரிவர்த்தனைகளுக்கு ஒரு விழுக்காடு கட்டணத்தை விதிக்கும்.
செயல்படும் தேதியிலிருந்து நீங்கள் செலுத்தும் தொகை இந்த கட்டணத்தை உள்ளடக்கியது என்று அது புதுப்பிக்கப்பட்ட அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ) பக்கத்தில் TNG Digital Sdn Bhd தெரிவித்திருக்கிறது. புதிய கட்டணம் இலக்கு நாணயத்தின் தினசரி மாற்று விகிதத்தில் சேர்க்கப்படும் என்று TNG குறிப்பிட்டது.
China, Singapore, Indonesia, Japan, Hong Kong, Thailand, South Korea, Macau, Philippines, Australia, பிரிட்டன், ஐக்கிய அரபு சிற்றரசு , அமெரிக்கா உட்பட 47 நாடுகளில் Touch ‘n Go e -Wallet சேவை தற்போது கிடைக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!