Latestமலேசியா

ராயர் மன்னிப்பு கேட்க வேண்டும் – ஷம்ரி வினோத் கோரிக்கை

கோலாலம்பூர், ஏப் 8 – இந்துக்களை அவமதித்ததாக தம்மை குற்றஞ்சாட்டியது தொடர்பில் DAP யின் Jelutong நாடாளுமன்ற உறுப்பினர் RSN Rayer மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அவர் சட்ட நடவடிக்கையை சந்திக்க வேண்டியிருக்கும் என சர்ச்சைக்குரிய முஸ்லீம் சமய போதகரான Zamri Vinoth Kalimuthu தெரிவித்திருக்கிறார். அதோடு தமக்கு எதிராக விடுத்த எச்சரிக்கையை அவர் மீட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். முகநூல் மற்றும் YouTube பில் சிவபெருமானை சிறுமைப்படுத்தி தாம் அறிக்கை வெளியிட்டதாக கூறி 2021 ஆம் ஆண்டில் தமக்கு எதிராக சிலர் போலீசில் புகார் செய்திருந்ததாகவும் அந்த போலீஸ் புகாரைத் தொடர்ந்து தாம் நான்கு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டதாகவும் Zamri Vinoth கூறினார்.

விசாரணையின் முடிவில் தாம் மீது மேல் நடவடிக்கை இல்லையென போலீசார் முடிவு செய்தனர். எனினும் சில தனிப்பட்ட நபர்கள் தமக்கு எதிராக நீதித்துறை சீராய்பு மனுவை தக்கல் செய்ததோடு தமக்கும் மற்றும் சட்டத்துறை தலைவர் மீதும் இந்த விவகாரம் தொடர்பில் தனிப்பட்ட குற்றவியல் வழக்கு மனுவை சமர்ப்பித்தாகவும் இறுதியில் அனைத்து வழக்குகளையும் கடந்த ஆண்டு மேல்முறையிட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததாக இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் Zamri Vinoth தெரிவித்தார். எனினும் இந்துக்களை அவமதித்ததற்காக தமக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா என ராயர் நாடாளுமன்றத்தில் அண்மையில் தொடர்ந்து உள்துறை அமைச்சர் Saifuddin Nasution Ismail லிடம் வினவிவந்ததாகவும் மீண்டும் மீண்டும் இத்தகைய கோரிக்கை எழுப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க தயங்கப் போவதில்லையெனெ Zamri Vinoth தெரிவித்தார். இதனிடையே மன்னிப்பு கேட்கும்படி கோரும் கடிதம் ராயரின் வழக்கறிஞர் அலுவலகத்திற்கு இன்று காலை அனுப்பிவைக்கப்பட்டதாக Zamri Vinoth த்தின் வழக்கறிஞர் Haniff Khatri
தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!