![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/12/046c8e15-753d-4842-bff4-262a951b1edc.jpg)
ஜாசின், டிச 26 – வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 187.6 ஆவது கிலோமீட்டரில் இரும்பு தடுப்பில் மோதி கார் ஒன்று கவிழ்ந்ததைத் தொடர்ந்து இரு பெண்கள் மரணம் அடைந்ததோடு மேலும் இரு பெண்கள் காயம் அடைந்தனர்.
அந்த விபத்து குறித்து இன்று காலை மணி 6.23 அளவில் தங்களுக்கு அவசர அழைப்பு கிடைத்ததாக மலாக்கா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்நது விபத்து நிகழ்ந்த இடத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவைச் சேர்ந்த 8 உறுப்பினர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்.
விபத்துக்குள்ளான பெரோடுவா மைவி காரிலிருந்து இரண்டு பெண்கள் வெளியேறியபோதிலும் நொறுங்கிய காருக்குள் சிக்கிக்கொண்ட இரு பெண்கள் இறந்ததைத் தொடர்ந்து அவர்களது உடல்கள் மேல் நடவடிக்கைக்காக போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது.