
கோத்தா பாரு, மார்ச்-30- பேராக் கெரிக் அருகே, கிழக்கு மேற்கு நெடுஞ்சாலையில் நேற்று திடீரென யானைக் கூட்டம் பிரவேசித்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஹரி ராயா விடுமுறையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்பட்ட நேரம் பார்த்து, அந்த யானைக் கூட்டம் காட்டுப் பகுதியிலிருந்து இந்த பக்கமாக நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றுள்ளன.
தாய் யானை முதல் குட்டி வரை சுமார் 10 யானைகள் இருந்தன.
அப்போது ஒரு யானை பிளிறிக் கொண்டு வாகனத்தை நோக்கி ஓடி வந்ததால் பரபரப்பு நிலவியது.
இரவு 7 மணி வாக்கில் நிகழ்ந்த அச்சம்பவத்தில் நல்ல வேளையாக யாருக்கும் காயமேற்படவில்லை.
யானைகள் ஆக்ரோஷமாகக் காணப்பட்டதால், உயிருக்கு பயந்து நாங்கள் வாகனங்களை பின்னால் riverse செய்தோம்.
நல்லவேளையாக அசம்பாவிதம் நடக்கவில்லை; யானைகளும் அமைதியாக சாலையைக் கடந்துசென்றதாக வாகனமோட்டி ஒருவர் கூறினார்.
வேலைக் காரணமாக வாரா வாரம் கிளந்தான் தானா மேராவுக்கும் ஈப்போவுக்கும் சென்றுத் திரும்பும் வழியில் யானைகைளைச் சந்திப்பது வாடிக்கை தான் என ஒரு தாதி கூறினார்.
ஆனால் இதுவரை அவை இந்த அளவுக்கு ஆக்ரோஷம் காட்டியதில்லை; ஒருவேளை வழக்கத்திற்கு மாறாக நெடுஞ்சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், இன்று யானைகள் பயந்திருக்கலாம் என்றார் அவர்.