
கோம்பாக், அக்டோபர்-18,
சிலாங்கூர் Batu Caves-சில் உள்ள Simfoni Heights வாகன நிறுத்துமிடக் கட்டிடத்திலிருந்து விழுந்து, ஒருவர் நேற்று இறந்து கிடந்தார்.
அதிகாலை 4.15 மணியளவில் நிகழ்ந்த அச்சம்பவத்தில் வாகன நிறுத்துமிட வளாகத்திற்கு அடியில் சாலையில் 25 வயது அவ்வாடவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
சவப் பரிசோதனைக்காக சடலம் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், தற்போதைக்கு அச்சம்பவம் திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கோம்பாக் போலீஸ் கூறியது.
மேல் விசாரணைகள் நடந்து வருவதால், இறந்தவரின் குடும்பத்தின் தனியுரிமையை மதிக்குமாறு பொது மக்களை போலீஸ் அறிவுறுத்தியது.
நேற்று மட்டும் மாடியிலிருந்து விழுந்து இறந்ததாக பதிவான இரண்டாவது சம்பவம் இதுவாகும்.
முன்னதாக மலாயா பல்கலைக்கழக மாணவர் குடியிருப்பு கட்டிடத்திலிருந்து விழுந்து மாணவர் ஒருவர் உயிரிழந்தார்