
கோலாலம்பூர், ஏப் 23 – TTDI எனப்படும் தாமான் துன் டாக்டர் இஸ்மாயில் லோரோங் டத்தோ சுலைமான் 2 இல் ஏற்பட்ட நிலச்சரிவை தொடர்ந்து அங்கிருந்த அனைத்துலக பள்ளியின் சுவர் இடிந்து விழுந்தது.
அந்த சம்பவத்தில் எவரும் பாதிக்கப்படவில்லையென தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இன்று காலை மணி 7.18 அளவில் இச்சம்பவம் தொடர்பாக அழைப்பு கிடைக்கப்பெற்றதை தொடரந்து அங்கு உடனடியாக இரண்டு தீயணைப்பு வண்டிகளைச் சேர்ந்த 15 தீயணைப்பு வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்.
வகுப்பறை, ஆசிரியர் அறை, கழிவறை, நுல் நிலையம் மற்றும் இரண்டு வாகனங்களும் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாக தீயணைப்பு நடவடிக்கை அதிகாரி காமண்டர்
அஸ்கான் ஹம்டான் தெரிவித்தார்