Latestஉலகம்

விமானப் பயணிகளுக்கு இரண்டு _power bank_ மட்டுமே அனுமதி; உலகளவில் புதியப் பாதுகாப்பு விதி அறிமுகம்

கோலாலம்பூர், மார்ச்-29-விமானப் பயணிகளுக்கு உலகளவில் புதிய பாதுகாப்பு விதிகள் உடனடியாக அமுலுக்கு வருகின்றன.

அதாவது, அனைத்துலக பொது விமானப் போக்குவரத்து அமைப்பான ICAO, ஒவ்வொரு பயணிக்கும் அதிகபட்சம் 2  power bank -கள் மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதி வழங்கும் புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும், விமானப் பயணத்தின் போது  power bank -களை சார்ஜ் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

lithium பேட்டரிகளால் ஏற்படும் தீ விபத்து அபாயங்களை குறைப்பதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சில நாடுகள் மற்றும் விமான நிறுவனங்கள் இதுபோன்ற கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியிருந்தாலும், ICAO-வின் இந்த அறிவிப்பு உலகளாவிய SOP தரநிர்ணயமாக அமைகிறது.

எனவே, பயணிகள் பயணம் மேற்கொள்வதற்கு முன் தங்களின் சாதனங்கள், விமான நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு ஏற்ப உள்ளதா என்பதை சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!