
கோலாலம்பூர், அக்டோபர்-27,
கோலாலம்பூர் மாநகர மன்றமான DBKL, அண்மைய புயல் மற்றும் கனமழையை கருத்தில் கொண்டு, மாநகரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, 53,822 மரங்கள் வெட்டப்பட்டு அல்லது கிளைகள் கத்தரிக்கப்பட்டுள்ளன.
மரங்கள் விழுந்து விபத்து ஏற்படுவதைத் தவிர்ப்பது, குறிப்பாக பொது மக்கள் அதிகம் வரும் பகுதிகளிலும் முக்கிய சாலைகளிலும் பாதுகாப்பை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
Arborist எனப்படும் 22 தகுதி பெற்ற மரம் வளர்ப்பியல் நிபுணர்களுடன் இணைந்து, கோலாலம்பூர் முழுவதும் மர பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதே சமயம், Menara DBKL கட்டடத்தில் உள்ள நடவடிக்கை அறையும் மாநகரம் முழுவதும் ஏற்படும் சம்பவங்களை கண்காணித்து தகவல் பரிமாற்ற மையமாக செயல்படுகிறது.
பொது தற்காப்புப் படையான APM, போலீஸ் மற்றும் தீயணைப்புப் படைகளுடன் இணைந்து, DBKL ஒருங்கிணைந்த மற்றும் விரைவான நடவடிக்கைகளையும் உறுதிச் செய்து வருகிறது.
இந்தக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெறும்; இதன் மூலம் கோலாலம்பூர் மக்களின் பாதுகாப்பும் நிம்மதியும் நிலைத்திருக்கும் என DBKL நம்பிக்கைத் தெரிவித்தது.



