
சார்லட், அக்டோபர்-26,
அமெரிக்காவின் வட கரோலினா மாநிலம் சார்லட் நகரில் வசிக்கும் சந்திரபிரபா சிங் எனும் இந்திய வம்சாவளி மாது, தனது கணவர் அர்விந்த் சிங்கை கத்தியால் தாக்கிய சந்தேகத்தில் போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
அவர் ஒரு தொடக்கப் பள்ளியில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
அக்டோபர் 12-ஆம் தேதி கணவர் வீட்டை சுத்தம் செய்யாத காரணத்தால் அத்தம்பதிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அதில் ஆவேசமடைந்த சந்திரபிரபா, கத்தியால் கணவரின் கழுத்தில் கடுமையான காயத்தை ஏற்படுத்தியதாக போலீஸ் அறிக்கை கூறுகிறது.
சந்திரபிரபாவோ, இது “தற்செயலாக நடந்த ஒரு விபத்து” என கூறியுள்ளார்.
ஆனால், கொல்லும் நோக்கத்துடன் தாக்குதல் நடத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
44 வயது சந்திரபிரபா பணியாற்றிய பள்ளி நிர்வாகமும் அவரை இடைநீக்கம் செய்துள்ளது.



