Latestமலேசியா

வெளிநாட்டவர்களுக்கு 30 நாள் eSP பயண அட்டை ஜனவரியில் அறிமுகம்

புத்ராஜெயா, நவம்பர்-25 – மலேசியாவுக்குள் நுழைந்து 30 நாட்களுக்கும் மேற்போகாமல் தங்க விரும்பும் வெளிநாட்டவர்களுக்காக, வரும் ஜனவரியில் eSP எனப்படும் இணையம் வாயிலான பயண அட்டையை குடிநுழைவுத் துறை அறிமுகப்படுத்தவுள்ளது.

அந்நடவடிக்கையானது, குடிநுழைவுத் துறையை டிஜிட்டல்மயமாக்கும் முயற்சிகளில் ஒன்று என்பதோடு, சேவை முகப்பிடங்களில் நெரிசலைக் குறைக்கும் நோக்கிலானது என, உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் (Datuk Seri Saifuddin Nasution Ismail) தெரிவித்தார்.

PLS எனப்படும் சமூகப் பயண அட்டை, PLIK எனப்படும் நீண்ட கால பயண அட்டை போன்றவற்றுக்கு புதிதாக விண்ணப்பித்து, அல்லது புதுப்பிக்கவோ மாற்றவோ விண்ணப்பித்து காத்திருக்கும் வெளிநாட்டவர்கள் இந்த eSP அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.

சாலை விபத்துகளில் சிக்கியவர்கள், இயற்கைப் பேரிடர்களில் பாதிக்கப்பட்டவர்கள், தவிர்க்க முடியாத இக்கட்டானச் சூழலில் சிக்கிய வெளிநாட்டவர்களும் அதற்கு விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் சொன்னார்.

என்றாலும், உண்மையிலேயே தகுதிப் பெற்ற வெளிநாட்டவர்களுக்கு மட்டுமே இந்த eSP வசதி கிடைப்பதை உறுதிச் செய்ய, விண்ணப்பங்கள் அனைத்தும் துல்லியமாக பரிசீலிக்கப்படும்.

அதே சமயம், இணையம் வாயிலாக மேற்கொள்ளப்பட்டாலும், பாதுகாப்பு விஷயத்தில் அனுசரணைப் போக்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என டத்தோ ஸ்ரீ சைஃபுடின் திட்டவட்டமாகக் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!