
ஹனோய், பிப்ரவரி-27 – வெளிநாட்டுப் பயணங்களைக் குறைத்துக் கொள்ளுமாறு தமக்கு அறிவுரைக் கூறுவோருக்கு, முதலீட்டைக் கவருவதற்கான தமது அயரா உழைப்புப் புரிவதில்லை என பிரதமர் சாடியுள்ளார்.
வர்த்தக நாடான மலேசியாவுக்கு முதலீடு முக்கியமாகும்; அது இல்லாமல் வேலை வாய்ப்புகளை உருவாக்கவோ நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தவோ முடியாது என டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
வெளிநாட்டுப் பயண அட்டவணைகள் பல்வேறு சந்திப்புக் கூட்டங்களால் நிரம்பி வழிகின்றன; கோல்ஃப் விளையாட ஒரு நாள் விடுப்புக் கூட எடுப்பதில்லை; அனைத்தும் நாட்டிற்கு முதலீட்டைக் கவருவதற்கே .
இது புரியாமல் எதற்காக அடிக்கடி வெளிநாட்டுப் பயணம் என சிலர் என்னைக் கேட்கிறார்கள் என பிரதமர் குறைப்பட்டு கொண்டார்.
ஆசியான் தொடர்பான ஆய்வரங்கில் பங்கேற்கும் பொருட்டு வியட்நாம் தலைநகர் ஹனோய் சென்றுள்ள டத்தோ ஸ்ரீ அன்வார், அங்கு மலேசிய செய்தியாளர்களிடம் பேசினார்.
வரலாற்றியேயே ஆக அதிகமாக கடந்தாண்டு மலேசியா 378.5 பில்லியன் ரிங்கிட் முதலீட்டை பதிவுச் செய்திருப்பதாக, முதலீடு, வாணிபம், தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோ ஸ்ரீ சா’ஃவ்ருல் அப்துல் அசிஸ் முன்னதாகக் கூறியிருந்தது குறிப்பித்தக்கது.