Latestஇந்தியாமலேசியா

வேலை தேட மலேசியாவுக்கு வரும் இந்தியர்கள்; 30 நாள் விசா விலக்குச் சலுகையைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது அறிவுறுத்து

கோலாலம்பூர், செப்- 22 -30 நாள் விசா இல்லாத பயண வசதியைப் பயன்படுத்தி வேலை தேடி மலேசியாவுக்கு வரும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூததகம் தெரிவித்திருக்கிறது. அந்த விசா சலுகை சுற்றுலா மற்றும் சமூகப் பயணங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகிறது. அதனைப் பயன்படுத்தி வேலை தேடி வர வேண்டாம் என அது இந்தியர்களுக்கு அறிவுரை கூறியுள்ளது.

போலி வேலை வாய்ப்புகளை வழங்கும் நேர்மையற்ற முகவர்களால் பலர் ஏமாற்றப்பட்டு, விசா காலம் முடிந்த பின்னரும் தங்குவது, சட்டவிரோதமாக இருக்கும் நிலை, சுரண்டல், தடுப்பு மற்றும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டு வருவதை அது சுட்டிக் காட்டியது.

சுற்றுலாவுக்கு மட்டுமே வரும் இந்தியச் சுற்றுப் பயணிகள் திரும்பிச் செல்வதற்கான உறுதிப்படுத்தப்பட்ட விமானப் பயண டிக்கெட், ஹோட்டல் முன்பதிவு, மலேசிய டிஜிட்டல் வருகை அட்டை (MDAC) மற்றும் குறைந்தது ஆறு மாத காலம் செல்லுபடியாகும் கடப்பிதழ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.

மலேசியாவுக்கு வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன் MDAC-ஐ இணையம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். அதன் மூலம் வருகையின் போது குடிநுழைவுத் தொடர்பான பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும் என அது ஆலோசனை கூறியது.

வேலை அல்லது வேலை வாய்ப்பு நோக்கத்திற்காக மலேசியாவுக்கு வர விரும்பும் இந்தியர்கள், உரிய வேலை அனுமதி அல்லது Visa With Reference (VDR) இல்லாமல் பயணம் செய்ய வேண்டாம் என்றும் அது நினைவுறுத்தியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!