Latestமலேசியா

தமிழ்ப் பள்ளிகள் நலனில் தீர்வை மட்டும் ஆலோசிப்போம் – நாடாளுமன்றத்தில் கோபிந்த் சிங் வலியுறுத்து

கோலாலம்பூர், பிப் 25 –  தமிழ்ப்பள்ளிகளில் எழும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண அனைத்துத் தரப்புகளின் ஒத்துழைப்பும் அவசியம். தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் நீண்டநாள் சவால்களுக்குத் தீர்வு காணும் வகையில் இந்த விவகாரத்தில் தாம் தீவிர கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளார் இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங்.

இதனை கருத்திற்கொண்டு இந்த விவகாரத்திற்கு தீர்வு காண குறிப்பிட்டத் தரப்புகளோடு பேச்சு வார்த்தை நடத்தியதாக கோபிந்த் சிங் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தார்.

இன்று நாடாளுமன்றத்தில் தமிழ்ப்பள்ளி நலன் குறித்து பேசப்பட்டதால் இந்த விவகாரம் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்தை ஈர்த்திருப்பதால் தீர்வை மட்டும் ஆலோசிப்போம் என கோபிந்த் சிங்
வலியுறுத்தினார்.

பினாங்கு, சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி , பஹாங் ஜெராம் தோட்ட தமிழ்ப்பள்ளி, கெடா கத்தும்பா தோட்ட தமிழ்ப்பள்ளி ஆகியவை நீண்ட காலமாக பல சவால்களை எதிர்நோக்கியுள்ளன.

கல்வி அமைச்சரின் ஒத்துழைப்போடும் அரச சார்பற்ற இயங்களின் முயற்சியோடும் இப்பள்ளிகளின் விவகாரத்திற்கு நல்லதொரு தீர்வு எட்டும் என்றும் கோபிந்த் சிங் நம்பிக்கை தெரிவித்தார்.

இதனிடையே நீண்ட நாட்களுக்குப் பிறகு அந்த மூன்று பள்ளிகளின் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு வழி ஏற்பட்டதற்காக கோபிந்த் சிங்கிற்கு தனது பாராட்டை தெரிவித்துக்கொண்டார் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ராயர்.

இந்நிலையில், இணைய பாதுகாப்பு தொடர்பாக, குறிப்பாக சமூக வலைத் தலங்களின் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தமிழ்ப்பள்ளிகளிலும், இடைநிலைப் பள்ளிகளிலும் நடத்த மித்ரா இலக்கவியல் அமைச்சுடன் கைகோர்க்கத் திட்டமிட்டுள்ளதாக பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்ததையும் கோபிந்த் சிங் வரவேற்றார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!