
ஷா ஆலம், ஆகஸ்ட் 11 – ஷா ஆலாமிலுள்ள பள்ளி ஒன்றில், கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி படிவம் 2 மாணவர் ஒருவரை அவரது வகுப்பில் பயிலும் மற்றொரு மாணவி 10 செண்டி மீட்டர் நீளமுள்ள வளைந்த கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தில் மாணவனின் கையில் லேசான காயம் ஏற்பட்டதாக ஷா ஆலம் மாவட்ட காவல்துறைத் தலைவர் சருடின் சமா (Sarudin Samah) தெரிவித்துள்ளார். அம்மாணவி கைது செய்யப்பட்டு, பின்னர் காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டார்.
சம்பவத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும், சந்தேக நபர் உடல்நலக் குறைவுடன் இருந்ததாக நம்பப்படுவதாகவும் காவல்துறை தெரிவித்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது.



