Latestமலேசியா

ஷா ஆலாமில் வங்கிக் கொள்ளை துப்பாக்கிச் சூடு: முன்னாள் விரிவுரையாளருக்கு 30 ஆண்டு சிறை

ஷா ஆலாமில் வங்கிக் கொள்ளை துப்பாக்கிச் சூடு: முன்னாள் விரிவுரையாளருக்கு 30 ஆண்டு சிறை

ஷா ஆலாம், பிப்ரவரி-12,

ஏழாண்டுகளுக்கு முன்பு ஒரு வங்கிக் கொள்ளையின் போது துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றத்திற்காக, முன்னாள் விரிவுரையாளர் ஒருவருக்கு ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

2019, ஜூன் 3-ஆம் தேதி Glenmarie-யில் உள்ள வங்கியில் 2 முறை துப்பாக்கியால் சுட்டத்தை Chia Kong Wee கடந்த வாரம் ஒப்புக் கொண்டார்.

சம்பவத்தின் போது வங்கி ஊழியர்கள் மற்றும் பொது மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து நேற்று நீதிமன்றம் அத்தீர்ப்பை வழங்கியது.

சிறைத் தண்டனையோடு 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு அவர் மீது மற்ற நீதிமன்றத்தில் சுமத்தப்பட்ட 2 வேறு குற்றச்சாட்டுகளின் கடுமையையும், தண்டனையில் கருத்தில் கொண்டதாக நீதிபதி தெரிவித்தார்.

2017-ஆம் ஆண்டு ஒரு போலீஸ்காரரை சுட்டுக் கொன்றது, 3 ஆண்டுகள் கழித்து வங்கிக் கொள்ளையில் கண்ணாடி கதவை நோக்கி துப்பாக்கியால் சுட்டது ஆகியவையே அந்த 2 குற்றச்சாட்டுகளாகும்.

அவற்றுக்கும் தலா 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டன.

ஆக, 3 குற்றங்களுக்குமான சிறைத் தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!