
ஜோர்ஜ்டவுன், மார்ச்-18-நோன்புப் பெருநாளை ஒட்டி பினாங்கில் இலவச ஃபெரி சேவை வழங்கப்படுகிறது.
ஹரி ராயாவின் முதல் இரண்டு நாட்களில், அனைத்து மலேசியர்களுக்கும் இந்த இலவசச் சேவையை அனுபவிக்கலாம்.
Sultan Abdul Halim Terminal மற்றும் Raja Tun Uda Terminal இடையே இயக்கப்படும் ஃபெரி பயணங்களுக்கு இச்சலுகைப் பொருந்தும் என, பினாங்கு துறைமுக ஆணையத்தின் தலைவர் Yeoh Soon Hin தெரிவித்தார்.
இம்முயற்சி, பண்டிகை காலத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும், பொதுப் போக்குவரத்தை அதிகமாக பயன்படுத்த மக்களை ஊக்குவிப்பதற்கும் மேற்கொள்ளப்படுவதாக அவர் சொன்னார்.
இவ்வேளையில், 12 வயதுக்குட்பட்ட மலேசியக் குழந்தைகளுக்கு பினாங்கு ஃபெரி அருங்காட்சியகத்திலும் இலவச நுழைவும் வழங்கப்படுகிறது.
‘Kids Go Free Aidilfitri Special’ என்ற பிரச்சார இயக்கத்தின் கீழ் மார்ச் 23 முதல் 25 வரை அச்சலுகை வழங்கப்படுவதாக Soon Hin அறிவித்தார்.



