Latestஉலகம்மலேசியா

அதிசய்ஃ இருக்கை; 1998 விமான விபத்தில் உயிர் தப்பிய தாய்லாந்து நடிகரின் இருக்கையும் ஏர் இந்திய விமான விபத்தில் உயர் தப்பியவரின் இருக்கையும் 11A!

பேங்கோக் – ஜூன்-15 – இந்தியா, அஹமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே பயணியான ரமேஷ் விஷ்வாஸ் குமார் அமர்ந்திருந்த 11A இருக்கை குறித்து, ஒரு சுவாரஸ்யத் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது 27 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த தாய் ஏர்வேஸ் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கும் உள்ள ஒற்றுமையே அது. 1998 டிசம்பரில் நிகழ்ந்த அவ்விபத்தில் 146 பேரில் 101 பேர் பலியானார்கள்.

உயிர் தப்பியவர்களில், ரமேஷ் விஷ்வாஸ் மாதிரி 11A இருக்கையில் அமர்ந்திருந்த தாய்லாந்து நடிகரும் பாடகருமான ஜேம்ஸ் ருவாங்சக் லோய்சுசக்கும் (James Ruangsak Loychusak) அடங்குவார்.

இந்த ஏர் இந்தியா விபத்து குறித்து தனது ஃபேஸ்புக்கில் இட்ட பதிவில் அவர் அத்தகவலைப் பகிர்ந்தார் தான் உயிர் பிழைத்ததே வாழ்வதற்கு தனக்குக் கிடைத்த இரண்டாவது வாய்ப்பு என வருணித்த ஜேம்ஸ் ருவாங்சக், ஏர் இந்தியா விபத்தில் ஒரேயொருவராக ரமேஷ் உயிர் பிழைத்தது மயிர்க்கூச்செறிதலுக்கு சமம் என்றார்.

11A இருக்கையைக் காட்டும் ரமேஷின் விமான டிக்கெட் எனக் கூறி டிக்கெட் ஒன்று முன்னதாக வைரலானது. அஹமதாபாத் விபத்தில் மற்ற அனைத்து 241 பயணிகள் உயிரிழந்த வேளை, ரமேஷ் விஷ்வாஸ் குமார் அவசர கதவு வழியாக வெளியே தூக்கி வீசப்பட்டு காயங்களுடன் உயிர் தப்பினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!