Latestஇந்தியா

அனிருத்–காவ்யா மாறன் திருமணமா? நவம்பர் 11-ல் கிரீஸில் திருமணம், 21-ல் சென்னையில் வரவேற்பு எனத் தகவல்

சென்னை, அக்டோபர்-17,பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கும், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனுக்கும் அடுத்த மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்களது திருமணம் நவம்பர் 11-ஆம் தேதி கிரீஸ் நாட்டில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, நவம்பர் 21-ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறதாம்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை வழங்குவதற்காகக் கலாநிதி மாறனும் அவரது மனைவி காவேரி மாறனும் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்துள்ளனர்.

திருமண வரவேற்பு நடைபெறும் தேதியைத் தெலங்கானா முதலமைச்சர் அலுவலகமும் சமூக ஊடகப் பக்கத்தில் உறுதிப்படுத்தியது.

தமிழக முதல்வர் விஜய் உள்ளிட்ட திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், கிரீஸ் நாட்டில் நடைபெறவுள்ளதாகக் கூறப்படும் திருமணத் தேதி மற்றும் இடம் குறித்து அனிருத்தோ காவ்யா மாறனோ இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை.

அனிருத் இசையமைத்த ஜெயிலர் 2 படம் இரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், இப்படத்தின் மாபெரும் வெற்றி அனிருத்துக்கு சிறந்தத் திருமணப் பரிசாக இருக்கும் என இணையத்தில் வலைத்தளவாசிகள் கூறுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!