அம்பாங், அக்டோபர்-11, அம்பாங், தாமான் கோசாசில் உள்ள வீட்டொன்றில் தனது இரு ஆண் பிள்ளைகளை அடைத்து வைத்து, அவர்களின் நலன்களை அலட்சியப்படுத்தியதன் பேரில், உடம்புப்பிடி பணியாளரான 41 வயது பெண் கைதாகியுள்ளார்.
6 வயது சிறுவன் மற்றும் 13 மாதக் குழந்தையை 2 நாட்களாக அவர் அவ்வீட்டில் அடைத்து வைத்துள்ளார்.
39 வயது உள்ளூர் ஆடவர் செய்த புகாரை அடுத்து, அக்டோபர் 7-ஆம் தேதி அவ்விருவரையும் போலீஸ் பாதுகாப்பாக மீட்டது.
மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவ்விரு சகோதரர்களின் உடல் முழுக்க பழையக் காயத் தழும்புகளும் புதிய காயங்களும் கண்டறியப்பட்டன.
இருவரும் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
ஏற்கனவே ஒரு குற்றப்பதிவைக் கொண்டுள்ள அம்மாது, அக்டோபர் 16 வரை 7 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.