Latestமலேசியா

அரசாங்க வசதிகள் பாதுகாப்பு அம்சங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது, அரசியல் பிரச்சார நோக்கங்களுக்காக அல்ல – அன்வார் விளக்கம்

கோலாலம்பூர், நவ 18 – சபாவில் இருந்தபோது அரசாங்க வசதிகளைப் பயன்படுத்தியது அரசியல் பிரச்சார நோக்கங்களுக்காக அல்ல, மாறாக பாதுகாப்பு காரணங்களுக்காகவும் பிரதமர் என்ற முறையில் அதிகாரப்பூர்வ நெறிமுறைக்காகவும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

தாம் கலந்து கொண்ட அனைத்து அரசியல் நிகழ்ச்சிகளும் அல்லது பிரச்சாரங்களும் எப்போதும் அரசாங்க நிகழ்ச்சிகள் அல்ல. மாறாக கட்சியின் பெயரால் அது மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

சபாவில் அரசாங்க நிகழ்ச்சிகள் சம்பந்தப்பட்ட எந்த நிகழ்ச்சிகளும் இல்லை, மேலும் அனைத்து பிரச்சாரங்களும் கட்சியின் பெயரால் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்கள் என்பதால் இதனை நாடாளுமன்றத்திலும் விளக்கம் அளித்துள்ளதாக அன்வார் தெரிவித்தார்.

அரசாங்க கார்கள் பிரதமரால் பயன்படுத்த நெகிழ்வுத்தன்மையை வழங்குவதோடு , அவை பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ வாகனங்களின் தேவைகளை உள்ளடக்கியுள்ளது.

அதனால்தான் தாம் அந்த சொத்துக்களைப் பயன்படுத்தியதாக அன்வார் விளக்கம் அளித்தார். பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் சந்திப்பு நடத்தும் திட்டத்திற்கு தாம் அனுமதிக்காததற்கு காரணம் அரசியல் தொடர்பான ஒரு நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாக ஈடுபடுவதை விரும்பாததால், பல்கலைக்கழக மாணவர்களுடன் தேமு அன்வார் என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதைத் தாமே தடை செய்ததாகவும் அன்வார் தெரிவித்தார்.

தே. மு அன்வார் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதில் பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக ஈடுபடுவதை தாம் விரும்பாததால், நிகழ்ச்சியின் இடத்தை ரத்து செய்து மாற்றியதாக இன்று மக்களவையில் பிரதமரின் கேள்வி நேர (PMQT) அமர்வின் போது, ​​அன்வார் கூறினார்.

சபா மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தின் போது அரசாங்க சொத்துக்களைப் பயன்படுத்துவது குறித்து நாடாளுமன்றத்தில் பாசீர் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அஹமட் பாட்லி ஷாரியின் ( Ahmad Fadhli Shaari) துணை கேள்விக்கு பதிலளித்தபோது அவர் இத்தகவலை வெளியிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!