
புத்ராஜெயா, மே-15-தஹ்ஃபிஸ் (Tahfiz) மற்றும் சீன தனியார் பள்ளிச் சான்றிதழ் (UEC) பெற்ற மாணவர்கள், இனி அரசாங்கப் பல்கலைக்கழகங்களில் தங்களது உயர்கல்வியைத் தொடர வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டின் மனிதவள மேம்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில், இந்த இரு பிரிவைச் சேர்ந்த மாணவர்களும் சிறப்புப் பாதைகள் மூலம் பொது உயர்கல்வி நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்க இனி அனுமதி அளிக்கப்படும்.
இதன் மூலம் எந்தவொரு மாணவரின் திறமையும் வீணாகாமல் இருப்பதை அரசாங்கம் உறுதிச் செய்கிறது.
இருப்பினும், விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக, மலாய் மொழியில் சிறந்த தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும் என KPT கூறியது
Tahfiz மாணவர்கள் தங்களின் சமயக் கல்வியோடு நவீனக் கல்வியையும் இணைத்து பயிலவும், UEC மாணவர்கள் தகுதி அடிப்படையில் உயர்கல்வி பெறவும் இந்தத் திட்டம் வழிவகை செய்கிறது.
கல்வி ஜனநாயகத்தை நிலைநாட்டவும், உலகளாவிய ரீதியில் போட்டியிடக்கூடிய பட்டதாரிகளை உருவாக்கவும் இந்த மாற்றம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என உயர்கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.



