
பெட்டாலிங் ஜெயா, மே 22 – ஜோகூரில் 12 வயது மாணவியுடன் பாலியல் தொடர்பில் இருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் ஒருவர், விசாரணை நடைபெற்று வரும் நிலையில் பள்ளியிலிருந்து மாவட்டக் கல்வி அலுவலகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மாணவியின் தாயார் அளித்த காவல் துறை புகாரைத் தொடர்ந்து, ஆசிரியர் நேற்று இரவு கைது செய்யப்பட்டு ஆறு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஜோகூர் மாநில கல்வித் துறை (JPN) வெளியிட்ட அறிக்கையில், மாணவியின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதிப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும், பாலியல் முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு சிறுமியின் உடலை பாலியல் நோக்கத்திற்காகத் தொட்டது என்ற குற்றச்சாட்டின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.



