அவசர வழித்தடங்களை பயன்படுத்த போக்குவரத்து நெரிசலை காரணம் கூறுவதா?

சிரம்பான், ஜன 5 – நீண்ட போக்குவரத்து நெரிசல்கள் குறித்த விரக்தி, நெடுஞ்சாலைகளில் அவசர பாதைகளை தவறாகப் பயன்படுத்துவதை நியாயப்படுத்த ஓட்டுநர்கள் கூறும் முக்கிய சாக்குகளில் ஒன்றாகும். சாலைப் பயனர்கள் அவசர பாதைகளில் வாகனம் ஓட்டப் பழகிவிட்டதாகல் , தங்கள் இலக்குகளை விரைவாக அடைய விரும்புவதற்கு போக்குவரத்து நெரிசலை காரணம் கூறுவதாக நெகிரி செம்பிலான் சாலைப் போக்குவரத்துத்துறையின் இயக்குநர் ஹனிப் யூசப்ரா யூசுப் ( Hanif Yusabra Yusuf) தெரிவித்தார் .
அவசர பாதைகளைப் பயன்படுத்துவது சட்டத்தை மீறுவது மட்டுமல்லாமல், ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் இயக்கத்தையும் தடுக்கிறது. இதனால் மற்றவர்களின் உயிர்களும் சிக்கலுக்கு உள்ளாகும் சூழ்நிலை இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். பள்ளி விடுமுறை காலத்தில், டிசம்பர் 20ஆம்தேதி முதல் ஜனவரி 11 ஆம்தேதிவரை அவசர பாதைகளை தவறாகப் பயன்படுத்துவதை இலக்காகக் கொண்டு ஒரு நடவடிக்கையை சாலை போக்குவரத்து தொடங்கியது. நேற்றைய நிலவரப்படி, 1959 ஆம் ஆண்டின் விதிமுறை 53(1) ஐ மீறிய சாலைப் பயனர்களுக்கு 325 நோட்டிஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டவர்கள் 300 ரிங்கிட் அபராதம் அல்லது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படலாம் என Hanif தெரிவித்தார். இந்த விவகாரத்தில் எவருடனும் எந்த சமரசமும் செய்து கொள்ளப்படாது என அவர் குறிப்பிட்டார்.



