
கோலாலம்பூர், ஜூலை 22 – தங்களுக்கிடையிலான இரண்டு அவதூறு வழக்கு மனுக்களை நல்லெண்ண அடிப்படையில் தீர்வு காண்பதற்கு முன்னாள் பிரதமர் துன் டாக்டர் Mahathirதீரும், துணைப்பிரதமர் Ahmad Zahid Hamidi யும் இன்று இணக்கம் கண்டனர்.
தன்னை குட்டி என்று குறிப்பிட்ட விவகாரம் தொடர்பாக அவதூறான அறிக்கைகளை வெளியிட்டதாகக் கூறி, 73 வயதான Ahmad Zahid மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மனுவை மகாதீர் மீட்டுக்கொண்டார்.
அதே வேளையில் நீதிமன்றத்தில் நடந்து வரும் குற்றவியல் வழக்கு நடவடிக்கைகளில் தலையிட முன்னாள் பிரதமர் தனது செல்வாக்கை செலுத்த தனது பதவியைப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் பேரில் மகாதீர் மீதான அவதூறு வழக்கையும், Ahmad Zahid மீட்டுக்கொண்டார்.
மேலும் டாக்டர் Mahathirதீருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கான விண்ணப்பத்தை மீட்டுக்கொள்ளவும் Ahmad Zahid ஒப்புக் கொண்டார்.
‘குட்டி’ விவகாரம் தொடர்பாக Ahmad Zahidடிற்கு எதிரான வழக்கில் சாட்சியமளித்த பின்னர், கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் பத்திரிகையாளர்களிடம் தனது அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களின் பல நகல்களைக் டாக்டர் Mahathir காண்பித்தது தொடர்பான நடவடிக்கைகளுடன் இந்த வழக்கு சம்பந்தப்பட்டிருந்தது.