Latestமலேசியா

ஆசியான் உச்ச நிலை மாநாட்டின்போது வீட்டிலிருந்தவாறு இயங்கலை வகுப்புக்கள் நடத்தும் பள்ளிகளை கல்வி அமைச்சு அடையாளம் கண்டு வருகிறது

புத்ரா ஜெயா, மே 7 – எதிர்வரும் ஆசியான் உச்சநிலை மாநாடு 2025 இன்போது பாதிக்கப்படும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் வீட்டிலிருந்தவாறு இயங்கலை மூலம் பயில்வதற்கு அனுமதிக்கப்படுவர். ஆசியான் உச்சநிலை மாநாட்டின்போது சாலைகள் மூடப்படுவதால் பாதிக்கப்படும் பள்ளிகள் அடையாளம் காணப்பட்டு அந்த பள்ளிகள் தொடர்பான பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என அரசாங்க பேச்சாளரான தொடர்பு அமைச்சர் டத்தோ பாமி பாட்சில் தெரிவித்திருக்கிறார்.

ஆசியான் உச்சநிலை மாநாடு நடைபெறும் பகுதியிலுள்ள பள்ளிகளின் மொத்த எண்ணிக்கை மற்றும் அப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் வீட்டிலிருந்தவாறு இயங்கலை மூலம் படிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக இன்று அமைச்சரவை கூட்டத்திற்கு பின் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

மேலும் ஆசியான் உச்சநிலைக் கூட்டம் நடைபெறும்வரை தனியார் நிறுவனங்களின் ஊழியர்களும் வீட்டிலிருந்தவாறு வேலை செய்வதற்கு அனுமதிக்கும்படி தனியார் நிறுவனங்களை அரசாங்கம் ஊக்குவிக்கிறது.

இது குறித்தும் அமைச்சரவை விவாதித்துள்ளது. இம்மாதம் 25 மற்றும் 26ஆம் நாட்களில் நடைபெறும் ஆசியான் உச்சநிலை மாநாட்டு நிகழ்ச்சிகளின்போது ஆசியான் பேராளர்கள் பயன்படுத்தும் சாலைகளின் பட்டியல் குறித்த விவரங்களையும் போலீஸ் வெளியிடவிருக்கிறது.

கோலாலம்பூர் மாநாட்டு மையம், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், சுல்தான் அப்துல் அஸிஸ் ஷா விமான நிலையம் மற்றும் மாநகரிலுள்ள பல்வேறு ஹோட்டல்களைக் கொண்ட பகுதிகளில் மூடப்படும் சாலைகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. உச்சநிலை மாநாடு நெருங்கும் வேளையில் மூடப்படும் சாலைகளின் பட்டியலை
போலீஸ் வெளியிடும்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!