Latestமலேசியா

ஆசியான் வட்டாரத்தின் முதல் 10 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் 7 இடங்களில் கைப்பற்றிய மலேசியா

கோலாலம்பூர், நவம்பர்-8, ஆசியான் வட்டாரத்தின் முதல் 10 பல்கலைக்கழகங்களின் தர வரிசையில் மலேசியாவைச் சேர்ந்த 7 பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்துள்ளன.

முதலிரு இடங்களை சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகமும், சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் பிடித்துள்ள வேளை, மூன்றாமிடத்தை மலாயாப் பல்கலைக் கழகம் (UM) பிடித்துள்ளது.

அடுத்தடுத்த இடங்களில் மலேசிய புத்ரா பல்கலைக் கழகம் (UPM), மலேசியத் தேசியப் பல்கலைக்கழகம் (UKM), மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (UTM) வந்துள்ளன.

மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் (USM) எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

நாட்டின் தனியார் பல்கலைக்கழகங்களான Taylor’s University, UCSI University இரண்டும், முறையே ஏழாவது ஒன்பதாவது இடங்களை வகிக்கின்றன.

இவ்வேளையில் ஆசிய அளவில் UM 12-வது இடத்திலும், UPM 20-வது இடத்திலும், UKM 26-வது இடத்திலும் வந்துள்ளன.

பட்டப்படிப்பின் தரம், பல்கலைக்கழகத்தின் நற்பெயர், PhD தகுதியுடய போதனையாளர்களின் எண்ணிக்கை, அனைத்துலக ஆராய்ச்சிக் கட்டமைப்பு, உள்நாட்டு-வெளிநாட்டு மாணவர் பரிமாற்றம் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில், இந்த 2025 ஆசிய பல்கலைக்கழகங்கள் தர வரிசைப் பட்டியல் தயாராகியுள்ளது.

ஆசியா முழுவதும் 984 பல்கலைக்கழகங்கள் இந்த தர வரிசையில் இடம் பெற்றுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!